பத்ம விருதுகள் சர்ச்சை: முதல்வர் விஜயை சாடும் நயினார் நாகேந்திரன்|BJP leader Nainar Nagendran criticised CM Vijay for staying silent on Padma awards and return of Anaimangalam copper plates.

Spread the love

தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டதற்கும், ஆனைமங்கலம் செப்பேடுகள் மீண்டும் இந்தியா வந்தது குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

“உண்மையிலேயே நீங்கள் தமிழகத்தின் முதல்வரா அல்லது தமிழினத்தின் எதிரியா திரு. ஜோசப் விஜய் அவர்களே?

நமது மத்திய அரசு சார்பாக, தமிழகத்தைச் சேர்ந்த 13 சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு, அதில் 7 பேருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டு 24 மணி நேரங்கள் கடந்துவிட்டன.

விருது வாங்கியவர்கள் எல்லாம் செல்வச் செழிப்பில் திளைத்து, பண மெத்தையில் புரண்டவர்கள் இல்லை. சாதாரண குடும்பத்தில் பிறந்து தங்களது அசாத்திய திறமையினால் உலகை திரும்பிப் பார்க்கச் செய்த தமிழர்கள்.

அவர்களின் இந்த வெற்றி கண்டு உங்களுக்கு அகம் மகிழவில்லையா? நமது நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அவர்களைப் போன்ற சாமானியர்களுக்கு கிடைத்தது உங்களுக்கு பிடிக்கவில்லையா?

முதல்வராக இல்லாவிடிலும் சாதாரண தமிழனாக நீங்கள் கொண்டாடி களிக்க வேண்டிய நிகழ்வல்லவா இது? பின்பு எதற்கு இந்த கனத்த மௌனம்?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *