”படிப்புக்கு பண உதவி செய்வார்” – மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் பெண் ஆசிரியர் உட்பட இருவர் கைது

Spread the love

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை ஈஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா (38). இவர் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார்.

மேலும் இவர் தனது வீட்டில் மாணவிகளுக்கு டியூசன் எடுத்துள்ளார். திவ்யாவிடம் 16 வயது மாணவி ஒருவர் டியூசன் படித்திருக்கிறார். அந்த மாணவியின் பெற்றோர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருவதாகச் சொல்லப்படுகிறது,

போக்சோவில் கைது செய்யப்பட்ட பெண் ஆசிரியர்
போக்சோவில் கைது செய்யப்பட்ட பெண் ஆசிரியர்

தஞ்சாவூர் மாநகரப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் சண்முகசுந்தரராஜ் (61). இவரும் ஆசிரியை திவ்யாவும் நன்கு பழக்கமானவர்கள்.

இந்நிலையில், மாணவியின் குடும்ப நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி கொண்ட திவ்யா தனக்கு தெரிந்த நபர் ஒருவர் இருக்கிறார், படிப்புக்கு பண உதவி செய்வார் என சண்முகசுந்தரராஜை மாணவிக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

சண்முகசுந்தரராஜும், திவ்யாவும் கூட்டு என்பதால் மாணவியைத் தவறாக நடத்துவதற்காக திவ்யா இதைச் செய்துள்ளார். இதையடுத்து சண்முகசுந்தரராஜ் மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். மேலும் கடந்த ஒரு வருடமாக மாணவிக்கு போன் செய்து ஆபாசமாகப் பேசி வந்துள்ளார்.

இதை வெளியே சொன்னால் படிப்பு கேள்வி குறியாகும் என்கிற பயத்தில் மாணவி யாரிடமும் இதைச் சொல்லவில்லை என்கிறார்கள். ஒரு கட்டத்தில் சண்முகசுந்தரராஜ், எல்லை மீறிய நிலையில் தன் தோழியிடம் அழுது புலம்பியிருக்கிறார் அந்த மாணவி. பின்னர், மாணவி படிக்கும் பள்ளியின் பிரின்ஸ்பால் கவனத்திற்கு இந்த விவகாரம் சென்றுள்ளது.

போக்சோ சட்டம்
போக்சோ சட்டம்

உடனே பிரின்ஸ்பால், இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸ் மாணவிக்கு சண்முகசுந்தரராஜ் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததும், அதற்கு திவ்யா உடந்தையாக இருந்ததும் உறுதியானது.

இதைதொடர்ந்து, சண்முகசுந்தரராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த திவ்யா இருவரையும் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர். இதை முன்கூட்டியே அறிந்த சண்முகசுந்தரராஜ் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் அட்மிட் ஆகி விட்டதாகச் சொல்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *