செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கறை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறை வளாகத்தில் பல்வேறு நாட்டு காத்தாடிகளும், நம் இந்திய நாட்டு காத்தாடிகளும், தமிழக கலாசாரத்தை சிறப்பிக்கும் காத்தாடிகளும் வானத்தை வர்ண ஜாலமாக்குகின்றன.
தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் 5 வது தமிழ்நாடு சர்வதேச பட்டத் திருவிழா ஆகஸ்ட் 14,15,16 ஆகிய தேதிகளில் மாலை 3.00 மணிமுதல் 7.00 மணிவரை நடைபெறுகிறது. இது குறித்து குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனர் பென்னடிக்ட் சேவியோ,
“தமிழ்நாடு சுற்றுலாத்துறையுடன் இணைந்து வருடா வருடம் இந்த விழாவை நடத்தி வருகிறோம். இந்த நிகழ்வுக்கு இந்தியா, தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருத்து 40 குழுக்கள் வந்து உள்ளனர். தினமும் 200 பட்டங்கள் இந்த 40 குழுக்களாலும் பறக்க வைக்கப்படுகின்றன.
தமிழ்நாடு குழு சார்பில் பொய்க்கால் குதிரை, ஜல்லிக்கட்டு காளை, இந்தியா தேசிய கொடி போன்றவற்றை பட்டங்களாக பறக்கவத்து உள்ளோம். சென்ற வருடம் தமிழ் கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக ஜல்லிக்கட்டு காளை போன்ற அமைப்பு கொண்ட பட்டத்தினை பறக்க வைத்தோம். இந்த வருடம் உலக அமைதி என்ற கருத்தியல் கொண்ட பட்டத்தினை பறக்க வைத்தோம்.