பணம், குடும்பம், தொழில்.. இன்றைய ராசிபலன் (அக்.14) – Kumudam

Spread the love

மேஷம்

தேவையில்லாத விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் தேவைகளுக்காகச் சேமிப்பு கரையும் சூழல் உண்டாகலாம். பூர்வீக வீட்டைச் சீரமைத்து விரிவுபடுத்தும் முயற்சிகளில் இறங்குவீர்கள். கூட்டாளிகளின் ஆலோசனைகளைக் கேட்டு அதற்கேற்பச் செயல்படுவது வெற்றியைத் தரும். அலுவலகத்தில் வேலைப்பளு சற்று அதிகரிக்கும்.

ரிஷபம்

எதிரிகளை வெல்லும் மன உறுதியும் சாமார்த்தியமும் பிறக்கும். உங்கள் பேச்சில் கண்டிப்புடன் செயல்பட்டு வேண்டிய காரியங்களைச் சாதிப்பீர்கள். வருமானம் அதிகரித்து சேமிக்கும் அளவுக்கு நிலைமை உயரும். பழுதான உபகரணங்களை மாற்றிவிட்டு புதிய பொருட்களை வாங்குவீர்கள். அலுவலகத்தில் தேவையற்ற வாதங்களை நீக்குவது நல்லது. வியாபாரம் வழக்கம் போல் லாபகரமாக அமையும்.

மிதுனம்

குடும்பத்தில் உங்களது சொற்களுக்கு மண்பு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட நாளாக எதிர்பார்த்த நல்ல விலைக்குச் சொத்துகளை விற்றுப் பயனடைவீர்கள். பெரிய மனிதர்கள் மற்றும் சாதித்தவர்களின் நட்பு உங்களுக்குக் கைகொடுக்கும். அலுவலகச் சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாண்டு வெற்றியைத் தட்டுவீர்கள்.

கடகம்

ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டிருந்த செலவுகள் இனி குறையத் தொடங்கும். சவாலான பணிகளையும் நம்பிக்கையுடன் ஏற்று வெற்றிகரமாக முடிப்பீர்கள். பூர்வீக சொத்து அல்லது வீட்டை விரிவுபடுத்தி அழகுபடுத்துவீர்கள். வியாபார மேம்பாட்டிற்காகப் புகழ்பெற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். அலுவலகத்தில் தேடிக்கொண்டிருந்த முக்கிய ஆவணம் தற்செயலாகக் கையில் கிடைக்கும்.

சிம்மம்

பிள்ளைகள் தங்களின் பொறுப்பை உணர்ந்து பக்குவமாக நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் தழைத்தோங்கும். வாகனப் பராமரிப்புக்காகச் செலவுகள் செய்ய நேரிடும். ஆன்மீகம் மற்றும் யோகா போன்றவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் தடையின்றி வசூலாகும். மேலதிகாரிகளின் அனுசரணையும் ஆதரவும் கிடைக்கும்.

கன்னி

கடந்த கால நினைவுகளில் மூழ்கி நேரத்தை வீணடிக்காதீர்கள். உங்களைச் சுற்றியுள்ள சிலரின் நன்றி கெட்ட தனமான பேச்சுகளைப் பொருட்படுத்த வேண்டாம். வெளிவட்டாரத்தில் உங்களுக்கான மவுசு கூடும். வியாபாரத்தில் தொக்கி நின்ற பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரி நட்புக்கர நீட்டுவார். பிறர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

துலாம்

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் உங்கள் மீதான மதிப்பு உயரும். தந்தை வழி உறவுகள் மூலம் அனுகூலம் உண்டாகும். மூத்த சகோதரிகளின் மூலம் நிதி உதவி கிடைக்கப்பெறுவீர்கள். அலுவலகத்தில் தேவையற்ற வம்புகளில் மாட்டிக்கொள்ளாமல் உங்கள் வேலையை மட்டும் பார்ப்பது உத்தமம். வியாபாரம் மிகச் சிறப்பாக நடக்கும்.

விருச்சிகம்

ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் கையில் புழங்கும் பணம் சற்று வேகமாக கரையும். எதிலும் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் உடல்நிலையில் சிறிய அளவிலான சோர்வு ஏற்படலாம். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் திறனைப் பாராட்டுவார்கள். வியாபாரத் தளத்தில் போட்டிகள் சற்று தலைதூக்கக் கூடும்.

தனுசு

செலவுகளில் சிக்கனத்தைக் கடைப்பிடித்து சேமிக்கும் பழக்கத்தைத் தொடங்குவீர்கள். தாய் வழி உறவினர்கள் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிட்டும். பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான சூழல் உருவாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் வாதப்பிரதிவாதங்களைத் தவிர்க்கவும்.

மகரம்

மனதில் இருந்த சோர்வு விலகி உற்சாகமான மனநிலை பிறக்கும். பணவரவு மிகவும் திருப்திகரமாக இருக்கும். பூர்வீக வீடு, மனை அல்லது விவசாய நிலங்களை விற்க முயற்சிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு வரும். அரசாங்க ரீதியான காரியங்கள் வெற்றிகரமாக முடியும். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டு உங்களுக்கு ஊக்கமளிக்கும்.

கும்பம்

எதிர்பார்த்திருந்த நிதி உதவி உரிய நேரத்தில் கையில் வந்து சேரும். வீட்டில் பழுதான பொருட்களை மாற்றிவிட்டுப் புதிய பொருட்களால் வீட்டை அழகாக்குவீர்கள். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். அலுவலகத்தில் உங்களது பணித்தரம் மற்றும் மதிப்பு ஒரு படி உயர்வைச் சந்திக்கும்.

மீனம்

வரவேண்டிய பணம் தடையின்றி உங்கள் கைக்கு வந்து சேரும். எதிர்காலத் தேவைகளுக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள். புதிய நபர்களின் நட்பு உங்களுக்கு நன்மையைத் தரும். அலுவலகத்தில் மற்றவர்களின் விவகாரங்களில் தேவையின்றித் தலையிடுவதைத் தவிர்க்கவும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *