‘பண்டிகை காலம் என்றால் கொலைகள் நடப்பது சகஜம்’!- அமைச்சர் ராஜ்மோகன் பேச்சுக்கு அதிமுக கண்டனம்| admk slams tvk minister rajmohan’s speech

Spread the love

தமிழ்நாட்டில் தீபாவளி அன்று மட்டும் 12 கொலைகள் அரேங்கேறிய சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, “பண்டிகைக் காலங்களில் இதெல்லாம் புதிதல்ல… எதிர்க்கட்சிகள் தான் வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள்” என்று அமைச்சர் ராஜ்மோகன் பேசியிருந்தார்.

ராஜ்மோகனின் இந்தப் பேச்சுக்கு அதிமுக தலைமை கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டிருக்கும் பதிவில், “தமிழ்நாட்டில் ஒரே நாளில் 12 படுகொலைகள் நடந்த செய்தி பொதுமக்களின் நெஞ்சைப் பதைபதைக்க வைத்துள்ளன.

அமைச்சர் ராஜ்மோகன்

அமைச்சர் ராஜ்மோகன்

பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருக்கும் இந்தச் சூழ்நிலையில், இதைப் பற்றி கேள்வி கேட்டால் ஒரு பொறுப்புள்ள அமைச்சர் கூறும் பதில் என்ன தெரியுமா?

​”பண்டிகை காலங்களில் இதெல்லாம் புதிதல்ல… எதிர்க்கட்சிகள் தான் வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள்!” என்ன ஒரு பொறுப்பற்ற, திமிரான பதில்!

பண்டிகை காலம் என்றால் கொலைகள் நடப்பது சகஜம் என்று ஒரு அமைச்சரே நியாயப்படுத்தலாமா?

மக்களின் உயிரைக் காக்க வேண்டிய கடமையில் இருந்து நழுவி, இதை ஒரு சாதாரண நிகழ்வாகக் கடந்து செல்லத் துடிப்பது எந்த வகையில் நியாயம்?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *