பண்டிகை நாளில் NO காம்ப்ரமைஸ்…டாஸ்மாக் கடைகளுக்கு லீவு! விஜய் எடுத்த அதிரடி முடிவு! – Kumudam

Spread the love

தமிழ்நாட்டில் பண்டிகைக் காலங்களில் மதுபான விற்பனை அதிகரிப்பது வழக்கம். இதனால் மது அருந்திவிட்டு ஏற்படும் தகராறுகள், குடும்பப் பிரச்சினைகள், மோதல்கள் மற்றும் பல்வேறு குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முக்கியப் பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

குறிப்பாக, பண்டிகை தினம் மட்டுமின்றி, அதற்கு முந்தைய நாளிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை?

தீபாவளி பண்டிகையின்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறை தகவல்களின் அடிப்படையில், தீபாவளி நாளில் மட்டும் பல கொலைச் சம்பவங்கள் பதிவானதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கும், பண்டிகைக் காலங்களில் சட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதற்கும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக அரசு எடுக்கவுள்ள இறுதி முடிவைப் பொறுத்து, எந்தெந்த பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *