சமூக வலைதள ட்ரோல்கள் குறித்துத் பேசிய கியாரா, “இந்த விமர்சனங்களை என் கணவர் சித்தார்த் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை.
அவர் அதைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை. ஒருபோதும் அதைப் பற்றி என்னிடம் பேசியது கூட கிடையாது. எங்களுக்குள் இது ஒரு விவாதப் பொருளாகவே மாறவில்லை.
அவரை அது எந்த வகையிலும் பாதிக்கவில்லை. அவருடைய இந்தப் பக்குவம்தான் எனக்கும் மிகப்பெரிய பலமாக இருந்தது. இது பல தசாப்தங்களாகத் திரையுலகில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
ஐஸ்வர்யா ராய் தொடங்கி பல திறமையான நடிகைகள் இதை எதிர்கொண்டுள்ளனர். அதனால், என் தரப்பிலிருந்து எந்தவொரு விளக்கமும் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை.
‘டாக்ஸிக்’ திரைப்படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்ததும், எதிர்பார்த்த வசூல் கிடைக்காததும் ஆரம்பத்தில் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் மன வருத்தத்தையும் அளித்தது” எனப் பகிர்ந்திருக்கிறார்.