“பதற்றமடையும் சமயங்களில் என்னை அமைதிப்படுத்துவது அவர்தான்” – கணவர் விக்கி கெளஷல் பற்றி கத்ரீனா கைஃப் |katrina-kaif-opens-up-about-vicky-kaushal-support-and-motherhood

Spread the love

கணவர் விக்கி கௌஷல் குறித்து கத்ரீனா கைஃப், “ஒரு தொழிலை நடத்தும்போது அதற்கு எனக் குறிப்பிட்ட நேர வரையறை இருப்பதில்லை. நாம் செய்யும் வேலையை உண்மையாகவே நேசிக்கும்போது, கடிகாரத்தைப் பார்ப்பதோ அல்லது வேலை நேரத்தைக் கணக்கிடுவதோ கிடையாது.

சில சமயங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட நாங்கள் வேலை தொடர்பாகப் பேசிக்கொண்டிருப்போம். ஆனால், வீட்டில் ஒருவர் மட்டும் என் நேரத்தைக் கணக்கிட்டுக்கொண்டே இருப்பார். அது என் கணவர்தான்.

எப்போதும் “போனைக் கீழே வைத்துவிட்டுக் கொஞ்சம் ஓய்வெடு’ என்று என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்” என்றவர் தொடர்ந்து, “ஒரே நேரத்தில் திருமணம், தாய்மை மற்றும் பிசினஸ் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.

Vicky Kaushal - Katrina Kaif

Vicky Kaushal – Katrina Kaif

நடிகையாக, தொழிலதிபராக, மனைவியாக, தாயாக என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பழகுவதற்கு நமக்கு நாமே போதிய கால அவகாசமும் இடமும் கொடுக்க வேண்டும்.

எல்லாவற்றையும் சமாளிக்க முடியாமல் திணறும் தருணங்களில், நம்மை நாமே கடிந்துகொள்ளாமல் கொஞ்சம் அன்பாக நடத்த வேண்டும். என் கணவர் விக்கி கௌஷல் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருக்கிறார். நான் பதற்றம் அடையும் சமயங்களில் என்னை அமைதிப்படுத்துவது அவர்தான்” எனப் பகிர்ந்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *