” ‘பத்தா’ படத்தை 2-வது முறையாக பார்த்து அழுதேன்.!”- அனுராக் காஷ்யப் | anurag kashyap praises baththa and dorothy

Spread the love

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியானப் படம் “பத்தா’.

மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி-யில் வெளியாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் லிஜோ மோல் ஜோஸ், சிறுவன் சாய் பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அட்லீ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.

பலரும் இந்தப் படத்தைப் பாராட்டியிருந்த நிலையில், இயக்குநர் அனுராக் காஷ்யப் ‘பத்தா’ படத்தைப் பாராட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்த வாரத்தில் 2வது முறையாக ‘பத்தா’ படத்தைப் பார்த்தேன்.

இந்த முறை நான் நிறைய விஷயங்களை கவனித்தேன். நிறைய உணர்ந்தேன். நிறைய அழுதேன்.

அந்த பாத்ரூமில் பூட்டப்படும் காட்சியின்போது அவர் பசியுடன் இருந்திருப்பார் என நினைக்கிறேன். நான் அதை அவர் கண்களில் பார்த்தேன். அவரிடமே பேசி அதை உறுதி செய்து கொண்டேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *