US Elections: இந்திய வேர்கள்… அமெரிக்க அரசியல் களம் – மீண்டும் வெற்றி பெற்ற சுஹாஸ் சுப்ரமணியம்! | Who Is Suhas Subramanyam? Indian-American Lawmaker Wins Again in the US

Spread the love

வெள்ளை மாளிகை ஆலோசனைப் பணி

சட்டப் படிப்புக்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திலும் செனட் நீதித்துறைக் குழுவிலும் பணியாற்றினார். 2015-ம் ஆண்டு அப்போதைய அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகத்தில், வெள்ளை மாளிகையின் தொழில்நுட்பக் கொள்கைப் பிரிவில் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், அரசு நிர்வாகத்தில் தொழில்நுட்பப் பயன்பாடு உள்ளிட்ட விவகாரங்களில் பணியாற்றிய சுஹாஸ், பின்னர் தனியார் துறையில் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டார். அதேநேரத்தில் தன்னார்வ தீயணைப்பு வீரராகவும் மருத்துவ அவசர உதவியாளராகவும் களத்தில் பணியாற்றினார்.

சுஹாஸ் சுப்ரமணியம்

சுஹாஸ் சுப்ரமணியம்

விர்ஜீனியா அரசியலும் வரலாற்றுப் பதிவும்

2019-ம் ஆண்டு விர்ஜீனியா மாகாணப் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தொடர்ந்து மாகாண செனட்டிலும் பணியாற்றினார். அங்கு போக்குவரத்துக் கட்டணம், மின்சாரக் கட்டணம், மருந்துகளின் விலை போன்றவற்றைக் குறைக்கும் சட்ட முயற்சிகளில் முக்கியப் பங்கெடுத்தார்.

2024-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, விர்ஜீனியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்கர் என்ற வரலாற்றைப் படைத்தார்.

தற்போது மீண்டும் வெற்றி பெற்றிருக்கும் சுஹாஸ் சுப்ரமணியம், தொழில்நுட்பம், குடியேற்றக் கொள்கை, அரசு நிர்வாகச் சீர்திருத்தம் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இந்திய வேர்களைக் கொண்டு, அமெரிக்க அரசியலில் முக்கியப் பங்களிப்பை வழங்கி வரும் இவரது பயணம் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *