பன்னூன் கொலைச் சதி வழக்கு: நிகில் குப்தாவுக்கு 19 ஆண்டுகள் சிறை!|Pannun Assassination Plot: Indian National Gets 19-Year Jail Term

Spread the love

பின்னர், 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார். விகாஷ் யாதவ் இன்னும் சிக்கவில்லை.

கடந்த பிப்ரவரி மாதம், பன்னூனைக் கொலை செய்ய முயற்சித்ததாக நிகில் குப்தா ஒப்புக்கொண்டார்.

இதையடுத்துத் தான் நேற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

என்னென்ன குற்றச்சாட்டுகள்?

கூலிப்படை மூலம் கொலை செய்ய முயன்றது, அதற்காகச் சதித் திட்டம் தீட்டியது மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சதி ஆகிய குற்றச்சாட்டுகள் நிகில் குப்தா மீது வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிற்குத் தொடர்பு?

இந்தக் கொலைச் சதியில் இந்திய அரசுக்குத் தொடர்பு இருக்கிறது என்று பன்னூன் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்தியச் சட்டத்தின் கீழ் பன்னூன் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பதும், அவரது அமைப்பான ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *