Postal Votes: மதுராந்தகம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை! தபால் வாக்குகள் யாருக்கு சாதகம்? | Postal ballots are going to count at Maduranthagam by election 2026

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

செங்கல்பட்டு: மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில் அதில் முதலில் எண்ணப்படும் தபால் ஓட்டுக்களில் அரசு ஊழியர்கள், முதியவர்கள், யாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என்பதை பார்க்கலாம்.

மதுராந்தகம் சட்டசபை தொகுதிக்கு கடந்த 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், அதிமுக சார்பில் கணிதா சம்பத், திமுக சார்பில் பரந்தாமன், மார்க்சிஸ்ட் சார்பில் சுகந்தி, நாதக சார்பில் ஜானகிராமன், சுயேச்சைகள் என மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

by poll 2026 maduranthagam 2026

இந்த தேர்தலில் மொத்தம் 86.26 சதவீதம் ஆகும். இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் கொண்ட வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஆத்தூரில் உள்ள மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். மொத்தம் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணும் பணி நடைபெற போகிறது.

தபால் வாக்குகள் பெறும் பணிகள் கடந்த 28ஆம் தேதி தொடங்கியது. மதுராந்தகம் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவின் பேரில் 8 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுவினர் 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் ஊனமுற்றோர், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் உள்பட 931 வாக்காளர்கள் தபால் வாக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அந்த வகையில் இதுவரை 893 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்று முதலில் எண்ணப்படும் தபால் ஓட்டுகளில் யார் முன்னிலை என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *