பயின்று 440 மதிப்பெண்கள், நீட் மறுதேர்வு பயத்தில் விபரீத முடிவெடுத்த சேலம் மாணவி! -selam neet suicide update .

Spread the love

சேலம் மாவட்டம் எருமபாளையத்தைச் சேர்ந்த சேகர் – புவனேஸ்வரி தம்பதியரின் மகள்19 வயது கோபிகா. சேலம் கோட்டை அரசு பள்ளியில் பயின்ற இவர், 12- ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 440 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். மருத்துவராக வேண்டும் என்ற கனவில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்திருக்கிறார். இரண்டு முறை நீட் தேர்வு எழுதிய இவரால் போதிய மதிப்பெண் பெற முடியவில்லை. நாளை நடைபெற உள்ள நீட் மறுதேர்வுக்கு தயாராகி வந்திருக்கிறார். இந்த நிலையில், மறுதேர்வை எதிர்கொள்ள தைரியம் இல்லை எனக்கூறி தவறான முடிவான தற்கொலை செய்து நேற்று மதியம் உயிரை மாய்த்திருக்கிறார். கோபிகா வின் இந்த முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து மாணவி கோபிகாவின் தந்தை சேகர், ” விநாயகா மிஷன்ஸ் கல்லூரியில் நடைபெறவிருந்த நீட் மறுதேர்வை எழுதுவதற்காக மகள் பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தார். தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததால் நேரில் சென்று பார்த்தபோது தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.

கடந்த முறை நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றிருந்தாலும், இந்த முறை கண்டிப்பாக தேர்ச்சி பெறுவேன் என்று நம்பிக்கையுடன் கூறியிருந்தார். தேர்வில் வெற்றி பெறாவிட்டாலும் மாற்று கல்வி வாய்ப்புகளுக்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தேன். ஆனால் அதற்குள் இந்த முடிவை எடுத்துவிட்டார்” என வேதனை தெரிவித்தார்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல.

தற்கொலை தடுப்பு மையம்

தற்கொலை தடுப்பு மையம்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *