பரபரப்பான பட்டமளிப்பு விழா …..மாணவர்களுக்கு அடிப்பணிந்த ஆளுநர்…! – Kumudam

Spread the love

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டார்.

இவ்விழாவில் மொத்தம் 37,877 பேர் பட்டம் பெற உள்ளதாகவும் அனைவருக்கும் ஆளுநரே  பட்டங்களை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் தங்கம் பதக்கம் பெறும் 113 பேருக்கு மட்டுமே ஆளுநர் நேரடியாகப் பட்டங்கள் வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆளுநரிடம் நேரடியாகப் பட்டங்களைப் பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த மாணவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.‘

இதனால் பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்த மாணவிகள் பலரும் கண்ணீர் விட்டு அழுதனர். இந்த அறிவிப்புக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்கலைகழக நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் ஆளுநரின் செயலாளர் சஜன்சிங் சவான்  மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பின்னர் ஆளுநரே அனைத்து மாணவர்களுக்கு பட்டம் வழங்குவார் என்று தெரிவித்தார்.

இதனால் சுமார் 45 நிமிடம் தாமதமாக பட்டமளிப்பு விழா  நடைபெற்றது. ஏற்கனவே பல்கலைகழக நிர்வாகம் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றவதாக பாட இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு அனைவரும்  மத்தியிலும் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. இவ்விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றவதாக பாடப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் கண்டனம் தெரிவித்து உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளார்.

இதைபோல நெல்லை தவெக எம்எல்ஏ முருகன், கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பதாக அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்துவதால் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *