“இது கூட்டம் இல்ல… என் அசுரக் குடும்பம்!” – தனுஷ் | “Not Just A Crowd, You Are My Family” – Actor Dhanush Emotional Birthday Speech

Spread the love

என் ரசிகர்கள் இணையத்தில் தவறான தகவல்களையோ, வதந்திகளையோ பரப்புபவர்கள் அல்ல. களத்தில் இறங்கிக் களைகட்டுபவர்கள், அன்பைப் பரப்புபவர்கள். ‘அன்பே சிவம்’ என்ற வழியில் பயணிப்பவர்கள். நாம் எப்போதும் சொல்வது ஒன்றுதான்—அன்பைத் தருகிறார்களா? அன்பையே திரும்பக் கொடுப்போம். வெறுப்பைத் தருகிறார்களா? அதற்கும் அன்பையே பதிலாகக் கொடுப்போம்.

ஜூலை 28 என்பது ஒரு சாதாரண நாள்தான். மற்ற நாள்களைப் போல அதுவும் ஒரு தேதி, அவ்வளவுதான். ஆனால், பள்ளிப் பருவத்தில் யாராவது பிறந்தநாளுக்குப் புது உடையில் வரும்போது, சக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சாக்லேட் கொடுப்பார்கள்.

அன்றைய நாள் முழுவதும் அவர்கள்தான் ஸ்பெஷல். மூன்றாம் அல்லது நான்காம் வகுப்பு படிக்கும் வரை எனக்கு என் பிறந்தநாள் எப்போது என்றே தெரியாது. நானும் வீட்டில் கேட்டதில்லை, அவர்களும் சொன்னதில்லை.

ஆனால், பள்ளியில் சக மாணவர்கள் வண்ண உடையில் வருவதைப் பார்த்தபோது, நாமும் ஒருநாள் இப்படி வர வேண்டும் என்ற ஆசை வந்தது. என் அக்காவிடம் சென்று, ‘என் பிறந்தநாள் எப்போ? எனக்கும் கலர் உடையில் பள்ளிக்குச் செல்ல வேண்டும்’ என்று என் ஆசையைக் கூறினேன்.

அதன்பிறகு என் அக்காதான் பெற்றோரிடம் பேசி, ‘ஜூலை 28 தான் உன் பிறந்தநாள்’ என்று சொன்னார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *