பரமக்குடி: ஆட்டோ டிரைவர்கள் மோதலைத் தடுத்த பெண் போலீஸ்; தள்ளிவிடப்பட்டதால் பலியான சோகம் | Paramakudi; Female police dies while trying to avoid collision with auto driver

Spread the love

அப்போது மருத்துவமனைக்குள் இரண்டு தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் கண்ணகி மோதலில் ஈடுபட்டவர்களைத் தடுத்துள்ளார்.

இந்நிலையில் சண்டையிட்ட இளைஞர் கருப்பு ராஜா என்பவர் பெண் காவலர் கண்ணகியைத் தள்ளி விட்டுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கண்ணகிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த காவலர் கண்ணகியை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர்.

கருப்பு ராஜா

கருப்பு ராஜா

ஆனால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் காவலர் கண்ணகி உயிரிழந்தார். இதையடுத்து தகவலறிந்த வந்த போலீஸார், கண்ணகியைக் கீழே தள்ளிவிட்ட கருப்பு ராஜாவைக் கைது செய்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

மோதலைத் தடுக்க சென்ற பெண் காவலர் பலியான சம்பவம் பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *