டெல்லியைச் சேர்ந்த அமைச்சர் பர்வேஷ் வர்மா. இவரிடம் இளைஞர் ஒருவர் மோசமான சாலைகள் குறித்துக் கேள்வி கேட்டபோது, அந்த இளைஞரை பர்வேஷ் கன்னத்தில் அறைந்திருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அமைச்சரின் இந்தச் செயலுக்கு எதிர்ப்புகள் எழுந்திருக்கும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில்,
“டெல்லி அரசைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ஒருவர் இளைஞர் ஒருவரை அறையும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
அவர் செய்த குற்றம் என்ன? அவர் வீடியோ எடுத்தார். அவ்வளவு தான்.
அமைச்சருக்கு முன்னால் சாலை தோண்டப்பட்டுக் கொண்டிருந்ததைத்தான் அவர் தன் கேமராவில் பதிவு செய்தார்.
வாக்காளர்களுக்கு அஞ்சாத அதிகாரத்தின் முகம் இது.
தெருவில் கேள்வி கேட்டால் – அறை.
வினாத்தாள் கசிவு பற்றிக் கேள்வி கேட்டால் – தடியடி.
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டால் – மைக் அணைப்பு.