பறிமுதல் செய்யப்பட்ட 2,499 கிலோ கஞ்சா அழிப்பு: சென்னை காவல்துறை நடவடிக்கை   – Kumudam

Spread the love

சென்னை போதைப்பொருள் ஒழிப்புக் குழு மூலம் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள், செயற்கை போதைப்பொருட்கள், நீதிமன்ற உத்தரவு பெற்று, அங்கீகரிக்கப்பட்ட இடத்தில், அனைத்து சுற்றுச்சூழல் மற்றும் சட்ட வழிமுறைகளுக்கு உட்பட்டு, அறிவியல் பூர்வமாக எரித்து சென்னை காவல்துறை அழித்து  வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக, சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், போதைப்பொருள் ஒழிப்பு போலீஸ் குழுவினர் மற்றும்  தடயவியல் துறை உதவி இயக்குநர் தேவராஜன் ஆகியோர் தலைமையில், குழு உறுப்பினர்கள் மற்றும் காவல் குழுவினர் முன்னிலையில் சென்னை பெருநகர காவல் சரகத்திற்குட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் தாக்கலான 784 போதைப்பொருள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட மொத்தம் 2,449.37 கிலோ எடை கொண்ட கஞ்சாவை நீதிமன்ற உத்தரவு பெற்று நேற்று , செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கத்தில் உள்ள GJ மல்டிகிளேவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் அழிக்கப்பட்டது.  

அனைத்து சுற்றுச்சூழல் மற்றும் சட்ட வழிமுறைகளுக்கு உட்பட்டு, அறிவியல் பூர்வமாக எரித்து அழிக்கப்பட்டதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இளைஞர்களைப் பாதுகாப்பதற்கும், பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை நிலை நிறுத்துவதற்கும், போதைப்பொருட்கள், கடத்தல்காரர்கள் மற்றும் வலையமைப்புகளுக்கு எதிராக தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *