International
oi-Nantha Kumar R
ரோம்: இத்தாலியில் உள்ள பள்ளிகளில் மாணவிகள் புர்கா மற்றும் நிகாப் அணிந்து வரை தடை விதிக்கப்பட உள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி அதிரடியாக அறிவித்துள்ளார். இவர் பிரதமர் மோடியின் நெருங்கிய தோழியாக உள்ள நிலையில் அவரது அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது.

இத்தாலி பிரதமராக ஜார்ஜியா மெலோனி இருக்கிறார். இவரும், பிரதமர் நரேந்திர மோடியும் நல்ல நண்பர்களாக உள்ளனர். இந்நிலையில் தான் இன்று இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதுதொடர்பாக ஜார்ஜியா மெலோனி கூறியுள்ளதாவது:
”இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் அணிவதற்கு தடை விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மாணவிகள் தங்களின் முகத்த மறைக்காமல் பள்ளிக்கு செல்ல வேண்டும். உண்மையான அல்லது கற்பனையான மரபின் பெயரால் ஒருவர் தன் முகத்தை மறைத்து கொள்ள வேண்டும் என்பதை இத்தாலியில் யாரும் தீர்மானிக்க முடியாது.
அதேபோல், ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி, மாணவர்கள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோருக்கும் இத்தாலி மொழியை கற்பதும் கட்டாயமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விவகாரங்கள் அனைத்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட உள்ளது.
இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. நாட்டின் குடியேற்றம், மொழித்திறன் உள்ளிட்டவை பள்ளிகளில் ஒருங்கிணைக்கப்படடுகிறது. இப்படியான சூழலில் இத்தாலியில் கடும் சவால்கள் உள்ளன. வெளிநாட்டு மாணவர்களின் பெற்றோர்கள் இத்தாலி மொழி தெரியாமல் திணறுகின்றனர். இதனால் அவர்களுக்கு இத்தாலி மொழி கற்றுக்கொடுப்பது கட்டாயமாக்கப்படும். ற் மற்றும் பள்ளிகளில் ஆதாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி கூறியுள்ளார்.
இப்படியான உத்தரவுகளை போட்டுள்ள ஜார்ஜியா மெலோனி, பிற நாட்டின் தலைவர்களை போல் பிரதமர் மோடியுடன் நட்புடன் இருக்கிறார். குறிப்பாக இவர்கள் 2 பேரும் ஏதேனும் நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது Melodi என்ற ஹேஷ்டேக் டிரெண்ட்டாகும். இது இருவருக்கும் இடையேயான நெருங்கிய நட்பை பாறைசாற்றும் வகையில் இருக்கிறது.
அதாவது ஜார்ஜியா மெலோனி (Meloni) என்பதில் உள்ள Melo என்பதையும் மோடியின் (Modi) பெயரில் உள்ள கடைசி 2 ஆங்கில எழுத்தான Di என்பதையும் சேர்த்து Melodi என்று சொல்வார்கள். ஒவ்வொரு முறை இருவரும் சந்திக்கும்போது இந்தஹேஷ்டேக் டிரெண்ட்டாகும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.