‘பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக்கப்படுவதை இந்த அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்’- உதயநிதி கண்டனம் | Udhayanidhi Condemns coimbatore student akilan death

Spread the love

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “கோவையில் பள்ளியில் ஏற்பட்ட சாதிய பாகுபாட்டினால் 15 வயதுடைய ஒடுக்கப்பட்ட சமூக மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்யாத இந்த டம்மி அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அந்தப்பள்ளியில் மாணவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மாட்டிறைச்சி உண்பதாகக் கூறிய சம்பந்தப்பட்ட மாணவன், சாதி ரீதியாக வன்கொடுமையை எதிர்கொண்டு இருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்தச் சூழலில், கழகம் – முற்போக்கு அமைப்புகள் – மாணவனின் பெற்றோர்கள், உறவினர்களின் போராட்டத்துக்குப் பிறகு வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, மாணவனின் மரணத்துக்குக் காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக்கப்படுவதை இந்த அரசு உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *