“I worked like a madman and lost my relationships”—Aamir Khan sheds tears.-பைத்தியக்காரன் போல் வேலை செய்து உறவுகளை இழந்துவிட்டேன்: கண்ணீர் சிந்திய ஆமீர் கான்

Spread the love

இந்த எண்ணம் எனக்கு 56 வயதில் தோன்றியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், நான் 86 வயதில் இல்லை. இதைப் பற்றி 85 வயதில் நினைக்க தோற்றி இருந்தால் அது மிகவும் தாமதமாகி இருக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.

அவர் தனது பலவீனமான தருணங்களைப் பற்றி கூறுகையில், தனது சினிமா வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து வீழ்ச்சி வரை விவரித்தார். அவரது 1988 ஆம் ஆண்டு அறிமுகமான கயாமத் சே கயாமத் தக் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு, ஆறு மாதங்களுக்குள் ஒன்பது படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ததை ஆமீர்கான் நினைவு கூர்ந்தார். ஆனால், படப்பிடிப்பு தொடங்கியவுடன் தான் செய்த தவறை உணர்ந்ததாக தெரிவித்தார்.

“வீட்டிற்கு வந்து தனது மனைவி ரீனாவிடம் அழுது புலம்பியதாக ஆமீர்கான் கூறினார். படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தோல்வியடைந்தன. இதனால் தன்னை ஒற்றை பட அதிசயம் என்று முத்திரை குத்தினர். அந்த நேரத்தில், மனரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும், நான் புதைமணலில் இருப்பதைப் போல உணர்ந்தேன். நான் மெதுவாக மூழ்கிக்கொண்டிருந்தேன். மேலும் ஆழமாக மூழ்கி இருந்ததால் நான் வெளியே வருவதற்கு எவ்வளவோ சிரமப்பட்டேன்” என்று தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *