பள்ளி மாணவனை விடுவிக்க லஞ்சம் கேட்டு மிரட்டல்; எஸ்.பி-யிடம் சிக்கிய சிறப்பு எஸ்.ஐ! | police sub-inspector suspended for threatening and demanding a bribe to avoid filing a false case against a school student

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்துள்ள ராமாபுரம் கிராமத்தில், பொதுவழிப் பாதை பிரச்னை தொடர்பாக மார்க்கபந்து மற்றும் மணிமேகலை என்பவர்களின் குடும்பத்தினரிடையே தகராறு இருந்து வருகிறது.

இருக்குடும்பத்தினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தகராறு கைகலப்பாக மாறியது. இதுபற்றி, உமராபாத் காவல் நிலையத்தில் இரு வீட்டாரும் புகாரளித்திருக்கின்றனர்.

அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்துவதற்காக ராமாபுரம் கிராமத்துக்குச் சென்றனர். அப்போது அங்கு ஒருதரப்பைச் சேர்ந்த மணிமேகலை இல்லை.

இதனால், எதிர் தரப்புக்குச் சாதகமாக நடந்துகொண்ட போலீஸார் மணிமேகலையின் மகனான பிளஸ்-2 பயிலும் மாணவனை காவல் நிலையத்துக்கு வலுகட்டாயமாக அழைத்து சென்றிருக்கின்றனர்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன்

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன்

இதையறிந்த மணிமேகலை காவல் நிலையத்துக்கு விரைந்து சென்று மகனை விடுவிக்குமாறு கேட்டிருக்கிறார்.

அப்போது பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் என்பவர் “ரூ.10 ஆயிரத்தை எடுத்து வச்சிட்டு, உன் பையன கூட்டிக்கிட்டுப் போ. பணம் தரலைனா, உன் பையன் மேல பொய் கேஸ் போட்டு ஜெயிலுக்கு அனுப்பிடுவேன்” என்று வெளிப்படையாகவே மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மணிமேகலை போலீஸ் உயரதிகாரிகளிடம் நடந்தவற்றைக் கூறி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது புகாரளித்தார்.

இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி அக்‌ஷய் அனில் வாகரே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகனை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து, லஞ்சம் கேட்டது உண்மை தானா? என்று விசாரிக்க உத்தரவிட்டார்.

துறைரீதியான விசாரணையில், லஞ்சம் கேட்டு மிரட்டியது நிரூபணமானதால் மதியழகனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார் எஸ்.பி அக்‌ஷய் அனில் வாகரே.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *