Tamilnadu
oi-Vishnupriya R
பழனி: பழனி அருகே மற்றொரு கோயிலில் ரூ 2 கோடி மதிப்பிலான நில மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பழனி மலையடிவாரத்தில் ரூ 100 கோடி நிலத்தை ரூ 2 கோடிக்கு மோசடி செய்யப்பட்ட வழக்கின் அதிர்ச்சியே இன்னும் போகாமல் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு மோசடி சம்பவம் அரங்கேறியுள்ளது.
பழனி அருகே கிழக்கு ஆயக்குடியில் கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடத்துக்குச் சொந்தமாக நிலம் உள்ளது. இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ 2 கோடியாகும். ஆனால் இதை வெறும் ரூ. 9 லட்சத்திற்கு முறைகேடான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த பத்திரப்பதிவையும் ஜஸ்டின் மணிகண்டனே பதிவு செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது.
