பழனி முருகன் கோவில் நில சர்ச்சை: ‘பவர் சென்டர் யார்?’ – இபிஎஸ் கேள்வி|₹100 Crore Palani Temple Land Row: EPS Seeks CBI Investigation

Spread the love

அதுவும், முதலில் ஒரு சார்பதிவாளர் இதனைப் பதிவு செய்ய இயலாது என மறுத்த நிலையில், அவர் மாற்றப்பட்டு, வேறு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகு இந்தப் பத்திரப் பதிவு நடைபெற்றது என்றால், இந்தப் பத்திரப் பதிவிற்காகத்தான் புதிய அதிகாரியே வந்தாரா? அந்த அளவிற்கு அதிகாரியையே மாற்றி காரியத்தை முடிக்கும் அளவிற்கு யார் அந்த பவர்சென்டர்?

இதனை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி விசாரிப்பது என்பது, இந்தக் கேள்விகளுக்கு உண்மையான பதிலைத் தராது.

நேர்மையான விசாரணை நடைபெற, பழனி முருகன் கோயில் சொத்து முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க உடனடியாக இந்த அரசு மாற்றிட வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்”.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *