இது குறித்து தெரிவித்த சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் சிலர், “சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பொறுப்புமிக்க பதவி. அதை வணிக ரீதியான லாபங்களுக்காகப் பயன்படுத்துவது அந்தப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் செயல்.
எம்.எல்.ஏ மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பயன்படுத்தி, ஒரு தனியார் நிறுவனத்தின் துணியையோ அல்லது பொருளையோ விளம்பரப்படுத்துவது, மக்களைத் தவறாக வழிநடத்துவது போலாகும். தீபாவளி போன்ற பெரிய பண்டிகைக் காலங்களில் குறிப்பிட்ட ஒரு துணிக்கடையை ஆதரித்து ஒரு மக்கள் பிரதிநிதியாக விளம்பரப்படுத்துவது தார்மீக ரீதியாக தவறான முன்னுதாரணம்.
பண்டிகைக் காலங்களில் வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடிகளில் இருக்கும் அடித்தட்டுப் பெண்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளின் இதுபோன்ற வணிக ரீதியான ஆடம்பரப் பதிவுகள் பெரும்பாலும் மனக்கசப்பையும், ஏமாற்றத்தையுமே அதிகமாகத் தரும்” என்றனர்.

இது குறித்து தெரிவித்த எம்.எல்.ஏ தமிழ் செல்வி தரப்பு, “வழக்கமாக அந்தக் கடையில்தான் ஜவுளி எடுப்பார். குடும்ப நண்பர் என்ற காரணத்தினால் காலர் மைக் அணிந்து விளம்பர வீடியோவில் பேசிக்கொடுத்தார். மற்றபடி வேறு எதுவுமில்லை ” என்றனர்.