ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வரும் “ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்’ சீரிஸ்க்கு நல்ல வரவேற்பும், பாராட்டுங்களும் கிடைத்திருக்கின்றன.
போஸ் வெங்கட், காயத்ரி, நிகிலா சங்கர், ராஜ் ஐயப்பா ஆகியோர் நடிக்கும் இந்த சீரிஸை இயக்குநர் சிதம்பரம் இயக்குகிறார்.
‘ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்’ சீரிஸுக்காக, அதன் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று போஸ் வெங்கட்டை பேட்டி கண்டோம்.

ரோட்டில் போகும்போது “சார், சார்” என்று மக்கள் வந்து அன்பாகப் பேசுவது எனக்கு ‘மெட்டி ஒலி’ சீரியல் காலத்திலிருந்தே இருக்கிறது.
இப்போது ‘பிரதர்ஸ் & சிஸ்டர்ஸ்’ தொடருக்கு, அதே போன்றதொரு வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போது ஷாப்பிங் மால் அல்லது தியேட்டர்களுக்குச் செல்லும்போது பெண்கள் கூட்டமாக வந்து பேசுகிறார்கள்.
“சார், ‘பிரதர்ஸ் & சிஸ்டர்ஸ்’ பார்க்கிறோம், ரொம்ப சூப்பரா இருக்கு” என்று பாராட்டுபவர்கள், கூடவே, “உங்களுக்கு ஏன் சார் இதெல்லாம்?” என்று வருத்தமாகக் கேட்கிறார்கள். என் மனைவியும் இந்த சீரிஸைப் பார்ப்பதே இல்லை. “ஏன் பார்க்க மாட்டேங்குற?” என்று கேட்டால், “நான் அப்புறமா பார்க்கிறேன்” என்று சொல்லிவிடுகிறார்.