பாகிஸ்தானுக்கு மட்டும் டம்மியை கொடுத்த சீனா! உண்மையான பவர் இப்போதான் தெரியுது! | China Claims HQ-9B SAMs Hit Two Maneuvering Missiles After Poor Show Against IAF

Spread the love

International

oi-Halley Karthik

பெய்ஜிங்: ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் இந்தியாவின் விமானங்கள் மீது பாகிஸ்தான் பயன்படுத்திய ஏவுகணைகள் சீனா கொடுத்ததுதான். ஆனால் இந்த ஏவுகணைகள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு திறன் வாய்ந்தது இல்லை என்று பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், தற்போது இந்த ஏவுகணைகளின் முழு செயல்பாட்டு திறனை வெளி கொண்டு வந்திருப்பதாக சீனா கூறியிருக்கிறது.

கடந்த ஆண்டு மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. அப்போது இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தானின் எல்லைக்குள் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கின.

China

இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து.. பாகிஸ்தான், ஏவுகணைகளை வீசி கடும் பதிலடி கொடுத்தது. இதற்காக பாக். பயன்படுத்தியது HQ-9B ஏவுகணைகளைதான். இது சீனாவுடையது. நம்முடைய சுகோய் போர் விமானங்களிலிருந்து வீசப்பட்ட பிரமோஸ் போன்ற அதிவேக, குறைந்த உயரத்தில் பறக்கும் ஏவுகணைகளை இந்த HQ-9B சிஸ்டம் தடுக்க தடுமாறியதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இப்படி இருக்கையில் கடந்த நவ.2ம் தேதியன்று சீன அரசு ஊடகம் HQ-9B சிஸ்டம் குறித்து முக்கியமான செய்தியை வெளியிட்டிருந்தது. சீனாவின் ஷென்வெய் ஏவுகணை படைப்பிரிவு, ஒரே நேரத்தில் இருவேறு திசைகளிலிருந்து வந்த இலக்குகளை துல்லியமாக தாக்கியதாக அந்த செய்தியில் தெரிய வந்திருக்கிறது. அதெப்படி திமிங்கலம்? பாகிஸ்தானில் வேலை பார்க்காதது.. பார்டரை தாண்டி சீனாவில் மட்டும் வேலை பார்க்குதா? என்று பலரும் இது குறித்து சந்தேகம் கிளப்பியிருக்கின்றனர்.

ஆனால், சீனா அடித்து கூறுகிறது. HQ-9B சிஸ்டம் அற்புதமாக வேலை செய்ததாக தெரிவித்திருக்கிறது. குறிப்பாக HQ-9B சிஸ்டத்திலிருந்து புறப்பட்ட ஒரு ஏவுகணை.. நடுவானில் திடீரென மிக கடுமையான கோணத்தில் திசையை மாற்றி.. அதிவேகமாக கீழே இறங்கி இலக்கை தாக்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்த திசை மாறும் நிகழ்வு வெறும் 1-2 நொடிகளுக்குள் நடந்திருப்பதாக சீனா கூறியிருக்கிறது.

HQ-9 சிஸ்டம் என்பது ரஷ்யாவின் புகழ்பெற்ற S-300 வான் பாதுகாப்பு அமைப்பை அடிப்படையாக கொண்டு 1990களில் சீனாவால் உருவாக்கப்பட்ட மொபைல் ஏவுகணை அமைப்பாகும். இது ‘ட்ராக்-வியா-மிசைல்’ மற்றும் அகச்சிவப்பு ஆகிய இரட்டை வழிகாட்டுதல் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. இது ரோடர்களில் குறைவாக சிக்கும் இலக்குகளையும் துல்லியமாக தாக்கும்.

ஆனால், இவ்வளவு சிறப்பான HQ-9 சிஸ்டம்.. பாகிஸ்தானில் மட்டும் எப்படி ஃபெயலியர் ஆனது? என்று கேள்விக்கு இப்போது வரை பதில் இல்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *