அமெரிக்காவை முந்திய சீனா.. கடற்படையில் அசாத்திய பலம்! உற்று நோக்கும் இந்தியா! | China Expands Naval Fleet to Over 400 Ships, Sets Sights on Indian Ocean

Spread the love

International

oi-Halley Karthik

பெய்ஜிங்: உலகின் மிகப்பெரிய கடற்படையை கொண்ட நாடாக சீனா உருவாகியிருக்கிறது. அமெரிக்காவை விட அதிகமான அளவில் சீனாவிடம் தற்போது போர்க்கப்பல் இருக்கின்றன. இது இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது.

சீனா பல்வேறு துறைகளில் அசுர வேகத்தை எட்டி வருவது உண்மைதான். ஆனால், ராணுவம் என்று வரும்போது.. அதன் வளர்ச்சி வேகம் ட்ரிபிள் மடங்காக இருக்கிறது.

China

தங்களிடம் இருப்பதை விட 35 சதவிகிதம் அதிக அளவில் சீனாவிடம் போர்க்கப்பல்கள் இருக்கின்றன என அமெரிக்க ராணுவத்தின் அதிகாரபூர்வ புள்ளிவிவரவங்கள் தெரிவிக்கின்றன. சீனாவிடம் தற்போது 400க்கும் அதிகமான அதிநவீன போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் இருக்கின்றன. 2020ம் ஆண்டுக்கு பிறகு, இவ்வளவு சைலண்ட்டாக எந்த நாடும் இவ்வளவு வேகத்தில் போர்க்கப்பல்களை உருவாக்கியது கிடையாது. இந்த ஆண்டுகளில் சீனா 71 போர்க்கப்பல்களை கட்டமைத்துள்ளது.

இதுபோக.. 3 விமானம் தாங்கி கப்பல்களை அந்நாட்டு கடற்படை இயக்கி வருகிறது. இதெல்லாம் பாத்தாது என.. 4வது கப்பலையும் வேகமாக உருவாக்கி வருகிறது. இந்த கப்பல் அணுசக்தியால் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த பிரமாண்ட எண்ணிக்கை காரணமாக ஆசியாவின் பரபரப்பான கடல் வணிக பாதைகளில் தினமும் 100 சீன போர்க்கப்பல்கள் உலா வருகின்றன. சாதாரணமாக ஒரு சரக்கு கப்பலில் நீங்கள் தூத்துக்குடியிலிருந்து ஜப்பான் போகிறீர்கள் எனில்.. குறைந்தது 100 சீன போர்க்கப்பல்களையாவது பார்ப்பீர்கள்.

குறிப்பாக தைவான் நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதியில் எந்த நேரத்திலும்.. குறைந்தது 6 சீன கப்பல்கள் நிறுத்தப்பட்டிருக்கும். தென்சீன கடலில் இதைவிட அதிகமாக கப்பல்களை பார்க்க முடியும். இந்த கப்பல்களை சாங்சிங் தீவு பகுதியில்தான் சீனா உருவாக்கி வருகிறது. இந்தியா ஒரு கப்பலை உருவாக்க 5-8 ஆண்டுகளை எடுத்துக்கொள்கிறது. ஆனால் சீனா வெறும் 2.5 ஆண்டுகளில் ஒரு போர்க்கப்பலை உருவாக்கிவிடுகிறது. இப்படித்தான் 2023ல் 40,000 டன் எடை கொண்ட சிச்சுவான் எனப்படும் பிரம்மாண்ட போர்க்கப்பலை சீனா உருவாக்கியது. இது ட்ரோன்களை ஏந்தி செல்லும் உலகின் மிகப்பெரிய தாக்குதல் கப்பல்களில் ஒன்றாகும்.

இந்த அபிரிமிதமான வளர்ச்சிதான் இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை, வங்கக்கடல், இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் ஆகியவை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதால்.. இந்திய பெருங்கடலில் இந்தியா தனது கட்டுப்பாட்டை தக்க வைக்க கூடுதலாக போராட வேண்டியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *