தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருப்பவர் பிரபல நடிகர் தேவன்.
2004-ஆம் ஆண்டு கேரள மக்கள் கட்சி என்கிற கட்சியை நிறுவினார். 2004, 2006-ஆம் ஆண்டுத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார்.
2020-ஆம் ஆண்டு நவ கேரள மக்கள் கட்சி என்கிற கட்சியை மீண்டும் நிறுவினார். இந்தக் கட்சியை அடுத்த ஆண்டே, அதாவது 2021-ஆம் ஆண்டு பாஜகவுடன் இணைத்து, பாஜகவில் தன் அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார்.
தற்போது பாஜகவில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணையத் திட்டமிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்த நெஞ்சினிலே, ஷாஜகான், சிவகாசி ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைய இருப்பது குறித்து தேவன் ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
“நான் பாரதிய ஜனதா கட்சிக்காக மிகவும் தீவிரமாகவும், துணிச்சலாகவும், பல ஆபத்துகளை எதிர்கொண்டும் தீவிரமாகப் பணியாற்றி வந்தேன்.
ஆனால், அவர்களால் என்னுடைய லட்சியத்தையும், திட்டமிடலையும் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் இதற்கெல்லாம் எதிர்ப்பாக இருக்கிறார்கள்.