Allu Arjun: "பிடித்த பெண்ணின் வீட்டிற்கு வெளியே காத்திருங்கள்" – சர்ச்சையான அல்லு அர்ஜுன் ஸ்பீச்

Spread the love

ஹைதராபாத்தில் நடைபெற்ற தனது ரசிகர் மன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட அல்லு அர்ஜுன், இணையத்தில் நடக்கும் ரசிகர்கள் சண்டை மற்றும் ட்ரோல்கள் பற்றிப் பேசியிருக்கிறார்.

அப்போது அவர், “எனது ரசிகர்கள் மற்றும் என்னைப் பிடிக்காதவர்களுக்கும் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால், அவர்களை வெறுப்பதிலும், இணையத்தில் ட்ரோல் செய்வதிலும் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

Allu Arjun Fans Meet
Allu Arjun Fans Meet

அவர்களிடம் உங்கள் நேரத்தை 1% கூட வீணாக்கக் கூடாது. உங்களிடம் ரூ.100 இருந்தால், பிடிக்காத பொருளுக்குச் செலவழிப்பீர்களா? மாட்டீர்கள் அல்லவா! அதேபோல உங்கள் நேரத்தை உங்களுக்குப் பிடித்த விஷயங்களுக்குச் செலவிடுங்கள்.

அதற்குப் பதிலாக உங்களுக்குப் பிடித்த பெண்ணின் வீட்டிற்கு வெளியே போய்க் காத்திருங்கள்” என்று நகைச்சுவையாகப் பேசினார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் அல்லு அர்ஜுனுக்கு எதிராகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒரு பெண்ணின் வீட்டின் முன் போய் நிற்பது ஸ்டாகிங்.

இது தவறான செயலாகும். அதை ஒரு முன்னணி நடிகர் பொதுமேடையில் ஊக்குவிக்கும் வகையில் பேசியிருப்பது தவறானது மற்றும் பொறுப்பற்றது என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.

Allu Arjun Fans Meet
Allu Arjun Fans Meet

கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கும் ஒரு நடிகர், பேசும்போது இன்னும் கவனமாகவும் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டித்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *