பாஜகவுடன் இணைந்தது ஆம் ஆத்மி குழு – அவைத்தலைவர் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் | Aam Aadmi Party Group Joins BJP — Speaker Grants Official Recognition

Spread the love

மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP) இருந்தனர். இவர்களில் ராகவ் சதா உள்ளிட்ட 7 உறுப்பினர்கள், கடந்த வெள்ளிகிழமை ஆம் ஆத்மி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து செல்வதாக அறிவித்தனர். தாங்கள் பாஜகவின் சட்டமன்றக் குழுவில் இணைவதாக அவர்கள் அளித்த கடிதத்தை ஏற்றுகொள்வதாக மாநிலங்களவை அவைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று அறிவித்திருக்கிறார்..

எனவே, இனி ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ராகவ் சதா உட்பட பா.ஜ.க-வில் இணைந்த ஏழு உறுப்பினர்களும், மாநிலங்களவையில் இனி பா.ஜ.க-வின் ஒரு பகுதியாகவே கருதப்படுவார்கள்.

ஆம் ஆத்மி எம்.பி சுவாதி மாலிவால்

ஆம் ஆத்மி எம்.பி சுவாதி மாலிவால்

இதன் மூலம், 245 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அவையில் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க தன்வசம் வைத்திருக்கிறது. அதேநேரம், ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை, மக்களவை என இரண்டிலும் தலா மூன்று உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

தற்போது பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது 136 உறுப்பினர்களுடன் வலுவான நிலையில் உள்ளது. மாநிலங்களவையில் பெரும்பான்மைக்கு 123 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், இந்த இணைப்பின் மூலம் பா.ஜ.க தலைமையிலான கூட்டணிக்கு அவையில் சட்டங்களை நிறைவேற்றுவது மேலும் எளிதாகியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *