சமீபத்தில் நடந்த ‘ஜெயிலர் 2’ படத்தின் சூப்பர் ஷோ நிகழ்ச்சியிலும், “சீக்வெல் என்றாலே கிரியேட்டிவிட்டி குறைவாகி விட்டதாக எனக்குத் தோன்றும். ஏற்கெனவே செய்த விஷயங்களில் கொஞ்சம் காரம் சேர்த்துச் செய்வது போலதான் அது என நான் நினைப்பேன்.
ஆர்.எம். வீரப்பன் சாரும் நல்ல திரைக்கதை செய்து ‘பாட்ஷா 2’ பண்ணலாம் என்றார். ஆனால், அதில் எனக்கு ஈடுபாடு வரவில்லை. பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ‘பேட்ட 2’வுக்கான ஐடியாவைச் சொன்னார்.
விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை வைத்து அக்கதையை அமைத்திருந்தார். அந்த ஐடியாவும் நன்றாக இருந்தது. ஆனால், அதுவும் செய்யவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு ரஜினியின் ‘படையப்பா’ படம் ரீ-ரிலீஸ் ஆகியிருந்தது. அப்படம் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைக் காணொளி மூலமாகப் பகிர்ந்திருந்தார் ரஜினி. அப்போது அவர் ‘படையப்பா 2’ ஐடியா பற்றித் தெரிவித்திருந்தார்.
அதில் அவர் நீலாம்பரி கதாபாத்திரத்தை மையமாக வைத்து, அந்தப் படத்திற்கு ‘நீலாம்பரி: படையப்பா 2’ எனத் தலைப்பு வைக்கலாம் எனவும், அதற்குக்கதை சரியாக அமைந்தால் இரண்டாம் பாகம் செய்யலாம் என்பதையும் கூறியிருந்தார்.
மேலும், ‘சந்திரமுகி 2’ பற்றிப் பேச்சுகள் வந்தபோது, 2017-ல் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் பி. வாசு, “`சந்திரமுகி’யோட சீக்வெல் ஸ்கிரிப்ட் ரெடியா இருக்கு.
ரஜினி சார் நடிச்சா, அதைப் பண்ணலாம்னு வெச்சிருக்கேன். பொறுத்திருப்போம்” எனப் பகிர்ந்திருந்தார். பிறகு, ‘சந்திரமுகி 2’ ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியானது.
ரஜினியிடம் நீங்கள் எதிர்பார்க்கும் சீக்குவல் படம் என்னவென்பதை கமெண்டில் பதிவிடுங்கள்.