Five arrested for attempting to circulate counterfeit notes at a liquor bar in Coimbatore – கோவையில் மதுபான பாரில் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட முயற்சி – 5 பேர் கைது

Spread the love

கோவை செல்வபுரம் பைபாஸ் சாலையில் உள்ள எப்.எல்.2 பாரில் நேற்று மாலை 5 பேர் கொண்ட கும்பல் மது வாங்கிவிட்டு 500 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துள்ளனர். அந்த நோட்டுகளை பார்த்து சந்தேகமடைந்த பார் ஊழியர்கள், அவர்களை பிடித்து வைத்தனர். இது குறித்து பெரிய கடை காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெரிய கடைவீதி காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது.

பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் கரும்புக்கடை பாத்திமா நகரைச் சேர்ந்த அக்தர் பர்வேஷ் (21), ஆபில் (20), செல்வபுரம்

அமுல் நகரைச் சேர்ந்த யாயூ லியாஸ் (19), தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த ஷாகித் (19), முகமது இர்பான் (18) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து 500 ரூபாய் மதிப்பிலான 372 நோட்டுகள் என மொத்தம் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பிலான கள்ளநோட்டுகளையும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கள்ளநோட்டுகளை அச்சடிக்க முகேஷ் குமார் என்பவர் உதவி இருப்பதும் தெரியவந்த நிலையில், தலைமறைவாக உள்ள முகேஷ்குமார் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். ஏற்கனவே முகேஷ் மீது மோசடி மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தில் விட்டது உள்ளிட்ட புகார்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *