தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள மெலட்டூர், கோடுகிழி பகுதியில் விதியை மீறி இரவு நேரத்தில் டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. மெலட்டூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருப்பவர் முத்துவேல், தலைமைக் காவலர் ராமன். இவர்கள் இருவரும் டூவீலரில் கோடுகிழி பகுதியில் மணல் கடத்தல் நடக்கிறதா என்பதைக் கண்டுபிடித்து தடுப்பதற்காக நேற்று இரவு சென்றுள்ளனர்.

அப்போது, கோடுகிழி பாலம் அருகே டிராக்டர் ஒன்று வர எஸ்.எஸ்.ஐ முத்துவேல் டார்ச்லைட் அடித்து டிராக்டரை நிறுத்தச் சொல்லியுள்ளார். ஆனால் டிராக்டர் நிற்காமல் மோதுவதுபோல் வந்துள்ளது. பின்னர் நகர்ந்து செல்லும்போது விழுந்ததில் டிராக்டர் மோதி முத்துவேலின் கால, முகத்தில் காயம் ஏற்பட்டது. இதில் அதிர்ச்சியடைந்த தலைமைக் காவலர் ராமன், மெலட்டூர் காவல் நிலையத்தில் இருந்த போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.