பாபநாசர் கோயில்: `பக்தர்கள் தானமாக வழங்கும் பசுக்கள் கேரளாவில் விற்பனை?’ – பக்தர்கள் குற்றச்சாட்டு!

Spread the love

நெல்லை மாவட்டம், பாபநாசம் தாமிரபரணிக் கரையோரத்தில் பிரசித்தி பெற்ற உலகம்மை சமேத பாபநாசர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பரிகார ஸ்தலம் என்பதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிகிறார்கள். அவ்வாறு வருகை புரியும் பக்தர்கள், பரிகாரம் என்ற பெயரில் தாமிரபரணியாற்றில் புனித நீராடி ஆடைகளை களைந்து ஆற்றிலேயே விட்டுச் செல்கின்றனர். இதனால், தாமிரபரணி மாசுபடுவதுடன், துணிகள் குளிப்பவர்களின் கை, கால்களில் சிக்கி தடுமாறி பாறைகளில் வழுக்கி விபத்து ஏற்படுகிறது.

இதனால் தாமிரபரணி ஆற்றில் ஆடைகளை விடுபவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. திருக்கோயில் நிர்வாகத்தின் தீவிரக் கண்காணிப்பினால் பக்தர்கள் ஆற்றில் ஆடைகளை விட்டுச் செல்வது கணிசமாகக் குறைந்துவிட்டது. துணிகளை போடுவதற்கு என ஆங்காங்கே தனியாக இரும்புக் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பரிகார பூஜைகளுக்குப் பிறகு துணிகளை விட்டுச் செல்வதற்குப் பதிலாக பசுக்கள், கன்றுகளை கோ தானமாக வழங்கலாம் என பரிகார மண்டபங்கள் நடத்தி வரும் சிலர் கூறி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *