பாமக பிரமுகர் கொலை; போலீஸாரையும் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரௌடி சுட்டுப்பிடிப்பு! | murder of a pmk person in gudiyatham – rowdy who attacked police officers while attempting to escape gets shot and apprehended

Spread the love

இதுகுறித்து தகவலறிந்ததும், குடியாத்தம் தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பூவரசனை தேடிப்பிடித்து கைது செய்தனர். இதனிடையே, உயிரிழந்த ஞானவேலின் உறவினர்களும், பாட்டாளி மக்கள் கட்சியினரும் குடியாத்தம் அரசு மருத்துவமனை முன்பு குவிந்தனர். அங்கு பதற்றமான சூழல் நிலவியதால் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து, ஞானவேலின் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை பகுதியிலுள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து, கொலையாளி பூவரசனிடம் இருந்து போலீஸார் நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

இதற்கான, தோட்டா மருந்துகள் மலைப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக பூவரசன் தெரிவித்ததால், அவரை அந்த பகுதிக்கு இன்று காலை அழைத்துச் சென்றனர். அப்போது, திடீரென கத்தியை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜா என்பவரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார் பூவரசன். எதிர்பாராத இந்த தாக்குதலில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாவுக்கு இடது கையில் வெட்டு விழுந்தது. இன்னொரு போலீஸ்காரரும் காயமடைந்தார்.

சுட்டுப் பிடிக்கப்பட்ட ரௌடி பூவரசன்

சுட்டுப் பிடிக்கப்பட்ட ரௌடி பூவரசன்

இதையடுத்து, தப்பி ஓடிக்கொண்டிருந்த பூவரசனை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இதில், பூவரசனுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக, காயமடைந்த போலீஸாரும், குற்றவாளி பூவரசனும் மீட்கப்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வரும் போலீஸாரை, மாவட்ட எஸ்.பி சிவராமன் நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாகவும் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி சிவராமன், “சம்பவத்துக்கான காரணம் என்னவென்றால், ஒரு வாரத்துக்கு முன்பு பூவரசனின் நண்பர் ஒருவர் சேங்குன்றம் கிராமத்துக்கு வந்துள்ளார். அப்போது, ஞானவேல் தரப்பினர் அவரை நிறுத்தி `இது எங்க ஏரியா. வெளியாட்களுக்கு இங்கு என்ன வேலை?’ என்று கேட்டிருக்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *