“எதிரி நாட்டின் மீது படை எடுக்கும் இராணுவம் போல” – தவெக குறித்து எம்.பி கனிமொழி| Obscene message to the Collector: “Action will be taken, whoever it may be” – Minister Raj Mohan

Spread the love

அது ஒரு பெண் அரசு அதிகாரியாக இருந்தாலும் சரி, சாதாரணப் பெண்ணாக இருந்தாலும் சரி, இந்த ஆட்சியில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தவெக ஆட்சி பொறுப்பிற்கு வந்தால் தமிழ்நாட்டில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக இருப்பார்கள், குற்றங்களே நடக்காது, நாடே இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று உறுதியளித்தார்கள்.

ஆனால் நடைமுறையில், ஒரு எதிரி நாட்டின் மீது படை எடுக்கும் இராணுவம் செய்யும் அட்டூழியங்களைப்போலவே தவெகவினர் இன்று தமிழ்நாட்டைச் சூறையாடிக் கொண்டிருக்கும் சூழல் தான் நிலவுகிறது. இன்றைய சூழலில் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என யாருக்குமே பாதுகாப்பு இல்லாத அவலநிலை உருவாகியுள்ளது. நாள்தோறும் தொடரும் கொலைகளால் மக்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள். இந்த ஆட்சி ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள வேளையில், இனிமேலாவது அரசு தங்களின் நிலைமையை உணர்ந்து, பொறுப்போடும் கவனத்தோடும் செயல்பட வேண்டும்.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *