பாமாயில், துவரம் பருப்பு வாங்குவோருக்கு ஷாக்.. இந்த 3 பொருள் விலை பாருங்க.. விருதுநகர் சந்தை அப்டேட் | Palm Oil, Toor Dal Buyers Shocked? Check Prices of These 3 Items in Virudhunagar Market

Spread the love

Tamilnadu

oi-Hema Vandhana

விருதுநகர்: விருதுநகர் சந்தை என்றாலே தென் தமிழகத்தின் அத்தியாவசியப் பொருட்களின் விலைநிலவரத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான சென்டராகும்.. இங்கு வாரந்தோறும் வெளியிடப்படும் உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில், இந்த வாரமும் விருதுநகர் சந்தையில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு விலை நிலவரம் வெளியாகி உள்ளது.

பாமாயில் மற்றும் துவரம் பருப்பின் வரத்து குறைந்ததால் அவற்றின் விலையில் திடீரென உயர்வு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், உளுந்தம் பருப்பு மற்றும் பாசிப் பருப்பின் விலையில் ஓரளவு சரிவு காணப்பட்டு, நுகர்வோருக்கு கொஞ்சம் ஆறுதலை தந்துள்ளது.

Virudhunagar Virudhunagar Market Palm Oil Toor Dal Market Prices Price Update Pulses Grocery Prices

விருதுநகர் சந்தை

சந்தையில் சமையல் எண்ணெய்களில் பிரதானமாக இருக்கும் பாமாயில் விலை இந்த வாரம் உயர்ந்துள்ளது. ஏனென்றால், கடந்த வாரம் 15 கிலோ கொண்ட பாமாயில் டின் ஒன்று 2,340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த வாரம் டின் ஒன்றுக்கு 20 ரூபாய் அதிகரித்து, 2,360 ரூபாயாக இப்போது விற்பனை செய்யப்படுகிறது.

சமையலுக்கு தினமும் பயன்படுத்தப்படும் பாமாயிலின் இந்த சிறிய அளவிலான விலை உயர்வு கூட நடுத்தர குடும்பங்களின் மாத வரவு செலவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

பாமாயில், துவரம் பருப்பு விலை

அடுத்ததாக, அத்தியாவசிய உணவுப் பொருளான துவரம் பருப்பின் விலையிலும் குறிப்பிடத்தக்க ஏற்றம் காணப்படுகிறது. சந்தைக்குத் துவரம் பருப்பின் வரத்து கணிசமாகக் குறைந்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக வியாபாரிகளால் கூறப்படுகிறது.

நயம் ரகத் துவரம் பருப்பு 100 கிலோ கடந்த வாரம் 10,800 ரூபாய் முதல் 11000 ரூபாய் வரை விற்பனையானது. இந்த வாரம் குவிண்டாலுக்கு 300 ரூபாய் வரை உயர்ந்து, ஒரு மூட்டை 11100 ரூபாய் முதல் 11500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

பாசிப்பருப்பு – மூட்டைகளின் விலை

அதேபோல் நயம் லையன் ரகத் துவரம் பருப்பு 100 கிலோ கடந்த வாரம் 10,300 ரூபாய் முதல் 10500 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் குவிண்டாலுக்கு 500 ரூபாய் வரை அதிரடியாக உயர்ந்து, ஒரு மூட்டை 10,800 ரூபாய் முதல் 11,100 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது.

துவரம் பருப்பின் விலை ஏறிய அதேநேரத்தில், உளுந்தம் பருப்பு மற்றும் பாசிப் பருப்பு வகைகளின் விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகமாக காணப்படுகின்றன.

நாட்டு ரக உருட்டு உளுந்தம் பருப்பு 100 கிலோ கடந்த வாரம் 10,600 ரூபாய் முதல் 10800 ரூபாய் வரை விற்றது. ஆனால் இந்த வாரம் சந்தைக்கு வரத்து அதிகரித்ததன் காரணமாக, குவிண்டாலுக்கு 200 ரூபாய் குறைந்து, மூட்டை ஒன்று 10,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இருந்தாலும், பர்மா எஃப்.ஏ.க்யூ ரக உருட்டு உளுந்தம் பருப்பு கடந்த வாரம் 8,600 ரூபாய் முதல் 8800 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் குவிண்டாலுக்கு 400 ரூபாய் உயர்ந்து, மூட்டை ஒன்று 9000 ரூபாய் முதல் 9,200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

அத்தியாவசிய பொருட்கள் விலை

அதேபோல தொலி உளுந்தம் பருப்பு 100 கிலோ கடந்த வாரம் 9800 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை விற்பனையானது. இந்த வாரம் மூட்டைக்கு 600 ரூபாய் வரை கணிசமாகக் குறைந்து, 9,200 ரூபாய் முதல் 9300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும், பாசிப்பருப்பு 100 கிலோ கடந்த வாரம் 9,000 ரூபாய் முதல் 9,150 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் மூட்டைக்கு 100 ரூபாய் குறைந்துள்ளது.. அப்படியானால் 8,900 ரூபாய் முதல் 9,000 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.

இவ்வாறாக பருப்பு மற்றும் எண்ணெய் வகைகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும், பிற முக்கிய அத்தியாவசியப் பொருட்களான வத்தல், பட்டாணி பருப்பு, கடலை எண்ணெய் மற்றும் காபி ஆகியவற்றின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல், கடந்த வார நிலையிலேயே இப்போதும் நீடித்து வருகின்றன. வரத்துக்கு ஏற்ப இந்த விலை ஏற்ற இறக்கங்கள் அமைந்துள்ளதாக விருதுநகர் வியாபாரிகள் கூறுகிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *