அதனைத் தொடர்ந்து, 1985-இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளியான தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த காவியமான ‘முதல் மரியாதை’ சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்து.
அதன் பிறகு, 1987-இல் சாதியக் கட்டமைப்புகளுக்கு எதிராகப் புரட்சிகரமான கருத்துக்களைப் பேசிய ‘வேதம் புதிது’ திரைப்படம் சமூகப் பிரச்சினைகளை அலசும் சிறந்த திரைப்படத்திற்கான விருதைத் தட்டிச் சென்றது.

1994-ஆம் ஆண்டு பெண் சிசுக்கொலை என்ற சமூக அவலத்தை நெஞ்சை உலுக்கும் வகையில் வெளிச்சமிட்டுக் காட்டிய ‘கருத்தம்மா’ திரைப்படம் குடும்ப நலனை வலியுறுத்தும் சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து, 1996-இல் ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் உணர்வுப்பூர்வமான வாழ்க்கையை விவரித்த ‘அந்திமந்தாரை’ திரைப்படம் மீண்டும் ஒருமுறை சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது.
இறுதியாக, 2001-ஆம் ஆண்டு மீனவ மக்களின் வாழ்வியலையும் ஆழமான நட்பையும் அலைகளின் பின்னணியில் சொன்ன ‘கடல் பூக்கள்’ திரைப்படத்திற்காக பாரதிராஜா அவர்களுக்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.