நெல்லை, டவுன் அருகே உள்ள குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர், 52 வயதான பிளம்பிங் தொழிலாளி. இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 3-வது மகள், நெல்லை டவுனில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையான அந்த மாணவியின் தந்தை, வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் அந்த மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். `இது குறித்துத் தாய், சகோதரி, தாத்தா, பாட்டி என வீட்டில் உள்ளவர்கள் யாரிடமும் கூறக் கூடாது. அப்படிக் கூறினால் கொன்று விடுவேன்” என்று மாணவியை அச்சுறுத்தி மிரட்டி வந்துள்ளார்.

உயிருக்குப் பயந்த அந்த மாணவி, வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளர். இந்த நிலையில் அந்த மாணவி பயிலும் பள்ளிக்கு சமீபத்தில் தமிழக அரசின் ‘சிங்கப்பெண்’ அதிரடிப் படையினர் நேரில் சென்று, பாலியல் சீண்டல் மற்றும் அத்துமீறல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் மாணவிகளுக்கு தைரியம் ஊட்டி, “பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டாலோ அல்லது பிற மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளானாலோ யாருக்கும் பயப்படாமல் துணிச்சலாக புகார் அளிக்க வேண்டும். புகார் அளிக்கும் மாணவியின் பெயர் ரகசியம் காக்கப்படும்.