சுரேஷ் பேசுகையில், “நானும் சினிமாவுலதான் வேலை பார்க்கணும்னு வந்தேன். எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனே நீங்கதான். நான் கல்லூரியில் இரண்டாமாண்டு படிச்சப்போ உங்களோட ‘மீசைய முறுக்கு’ படம் ரிலீஸ் ஆச்சு.
அந்தப் படத்தைப் பார்த்து இன்ஸ்பையர் ஆகித்தான், கையில எதுவுமே இல்லாம சினிமா கனவோட சென்னைக்கு ஓடிவந்தேன். அன்னைக்கு சென்னைக்கு வந்தேன். இந்த தீபாவளிக்கு என் படம் ரிலீஸ் ஆகுது.
சூர்யா சாருடன் ‘சீன்’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நான் நடிச்சிருக்கேன். நான் இன்னைக்கு இந்த இடத்துல ஓடிட்டு இருக்கேன்னா, அதுக்கு முதன்முதல் காரணமா இருந்தவர் நீங்கதான்.
அதை உங்ககிட்ட நேர்ல சொல்லணும்னுதான் முக்கியமா இன்னைக்கு இங்க வந்தேன். என்னோட படம் ரிலீஸ் ஆகுது, நல்லாவும் நடிச்சிருக்கேன். கண்டிப்பா எங்க அம்மாவைத் தியேட்டருக்குக் கூட்டிட்டுப் போய் என்னோட படத்தைக் காட்டுவேன்” என்றார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி, “சுரேஷ், நீ ‘மீசைய முறுக்கு 2’ படத்தைக் கண்டிப்பா பார்க்கணும். எங்களுடன் நீ இந்தப் படத்தைப் பார்க்கணும்.
நான் எதுக்காகப் படம் எடுக்கிறேன், உங்களை மாதிரியான தம்பிங்களுக்காகத்தான் படம் எடுக்கிறேன்னு ஒரு நம்பிக்கையை எனக்குக் கொடுக்கும்.
நான் சரியான பாதையில்தான் போயிட்டு இருக்கேங்கிற நம்பிக்கையை உன்னை மாதிரி தம்பிங்கதான் எனக்குக் கொடுக்குறீங்க” என நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.