கோவை துடியலூரை அடுத்த அசோகபுரம் பகுதியில் கடந்த வாரம் ஒரு பெட்டிக்கடைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில், துடியலூர் காவல் துறையினர் விசாரித்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை இளைஞர் ஒருவர் சாலையின் ஓரத்தில் வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த காட்சிகள் பதிவாகியிருந்தது. அந்தக் காட்சிகளில், சாலை ஓரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் படுத்திருக்கும் நிலையில், சாலையில் நடந்து வந்த நபர், குரைத்து கொண்டு இருந்த நாயை பற்றி அவரிடம் கேட்கின்றார்.

பின்னர், நாயை விரட்டி விடும் அந்நபர், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சாலை ஒரத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்து உள்ளார். அப்போது தெருநாய்கள் விடாமல் குரைத்தபடி இருந்தும், அந்நபர் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்கிறார்.