“பாலிவுட் திரையுலகம் அதிகாரத்துக்கு வளைந்து கொடுக்கிறது” – அனுராக் காஷ்யப் ஓபன் டாக்! | “Bollywood bows to authority” – Anurag Kashyap speaks out!

Spread the love

பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்ய எந்த விஷயம் குறித்தும் உடைத்துப் பேசுவதற்கு தயங்காதவர். தொடர்ந்து இந்தித் திரையுலகில் நிலவும் அழுத்தங்கள் குறித்தும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு முன்னால் பாலிவுட் உலகம் எதிர்க்கொள்ளும் சிக்கல் குறித்தும் அடிக்கடி பேசி, குரல் கொடுத்து வருகிறார். சமீபத்திய கலந்துரையாடல் ஒன்றில், “அதிகாரத்தில் இருப்பவர்களுடன் சினிமா துறையினர் வளைந்துகொடுக்கும் சமரசங்களே இந்தித் திரையுலகின் தற்போதைய நிலைக்கு முக்கியக் காரணம்.

அனுராக் காஷ்யப்

அனுராக் காஷ்யப்

திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு பெரிய நன்மைகளும், சலுகைகளும் கிடைக்கும்போது, அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு வளைந்துகொடுக்கத் தொடங்குகிறார்கள். யாரும் இதை விரும்பி செய்வதில்லை என்றாலும், ஒரே ஒருமுறை சமரசம் செய்ய சம்மதித்துவிட்டால், அதன்பின் அந்த வழியை அடைப்பது மிகவும் கடினமாகிவிடுகிறது. அந்த ஒரு ‘சரி’ பெரிய அளவிலான சலுகைகளைக் கொண்டுவருவதால், அதைப் பழகிக்கொண்ட பிறகு அவர்களால் பின்வாங்க முடிவதில்லை. தாங்கள் செய்யும் சமரசங்கள் குறித்து அவர்களுக்குள் குற்றவுணர்ச்சியும் வெட்கமும் இருந்தாலும், அதை மாற்ற முடியாத சூழலிலேயே அவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *