DC: “வேற லெவல் ஸ்டைலா இருக்கு” – படக்குழுவினரைப் பாராட்டிய நடிகர் மகேஷ் பாபு | Actor Mahesh Babu has praised the DC movie after watching it.

Spread the love

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் “டிசி’. நடிகை வாமிகா கபி, நடிகர் சஞ்சீவ் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது.

சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் டிசி திரைப்படம் 4 நாட்களில் 50 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்தப் படம் குறித்து தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு தன் எக்ஸ் பக்கத்தில், “டிசி மிகவும் புதிய முயற்சி. மிகச்சிறந்த ஒரு திரைப்படம். படம் உண்மையிலேயே வேற லெவல் ஸ்டைலாக இருக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் ரசித்துப்பார்த்தேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், படக்குழுவினருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து படக்குழுவினரை டேக் செய்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *