அ.தி.மு.க துணை பொதுச்செயலாளராக எஸ்.பி. வேலுமணியை எடப்பாடி பழனிசாமி நியமித்தாலும், அவரது பழைய பதவியான கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் என்பது இரண்டாகப் பிரிக்கப்பட்டு, எஸ்.பி.வேலுமணியின் போட்டியாளர்களான செ.ம.வேலுசாமி, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாவட்டப் பொறுப்பை தராமல் மாநிலப் பொறுப்பை மட்டுமே எடப்பாடி கொடுத்திருப்பதால் வெகுண்டெழுந்த வேலுமணி, ‘பொறுப்பை நான் ஏற்கப்போவதில்லை.. என்னுடன் வந்தவர்களுக்கும் பொறுப்பும் கொடுங்கள்’ என ஆவேசமாக பொதுவெளியிலேயே பேசியிருக்கிறார்.
‘த.வெ.க-வுக்கு சென்றுவிட வேண்டும்’ என அவரது ஆதரவாளர்கள் சொன்னாலும், கட்சி மாறும் முடிவை வேலுமணி இன்னும் எடுக்கவில்லை. அ.தி.மு.க-வில் இருந்துகொண்டே எடப்பாடிக்கு குடைச்சல் கொடுத்து, கட்சியை ஒரு நபர் கட்டுப்பாட்டிலிருந்து மீட்க வேண்டும் என நினைக்கிறாராம் வேலுமணி.
இதுவரை நடந்த களேபரங்கள் போதாதென மீண்டுமொரு கலகத்துக்கு தயாராகிறது அ.தி.மு.க!