Tamilnadu
oi-Hema Vandhana
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பியூட்டி பார்லர் நடத்தும் பெண் ஒருவர், போன் மூலம் பழகி பைனான்சியர் ஒருவரைத் தனியாக வரவழைத்துள்ளார். பியூட்டிஷியனின் வார்த்தைகளை கேட்டதுமே, பைனான்சியருக்கு சபலம் வந்துவிட்டது. உடனே ஆசை ஆசையாக மகேஸ்வரியை பார்ப்பதற்காக ஓடியிருக்கிறார் காரைக்குடி பைனான்சியர்.. அடுத்து என்ன நடந்தது தெரியுமா?
திருப்புத்தூர் அருகே உள்ள தம்பிபட்டியைச் சேர்ந்தவர் வடிவேல்.. இவருக்கு 40 வயதாகிறது.. பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.. கடந்த மாதம் மகேஸ்வரி என்ற பெண்ணிடம் இருந்து இவருக்கு செல்போனில் அழைப்பு வந்திருக்கிறது.

காரைக்குடி பைனான்சியர்
ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் பேச ஆரம்பித்தாராம் மகேஸ்வரி.. ஆனால் போகப்போக அந்த பெண், வடிவேலிடம் மிகவும் நெருக்கமாக பழக தொடங்கியுள்ளார். ஒருகட்டத்தில் வடிவேலிடம், தனக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாக கேட்டுள்ளார்.
மகேஸ்வரியின் பேச்சை உண்மை என்று நம்பிய வடிவேலும், கடந்த ஜூன் 9ம் தேதி ஜிபே மூலம் 4,500 ரூபாயை அனுப்பியுள்ளார். ஆனால் இத்துடன் இந்த விவகாரம் முடியவில்லை. கடந்த ஜூன் 24ம் தேதி வடிவேலுக்கு மறுபடியும் போன் செய்துள்ளார் மகேஸ்வரி.. “உங்களை பார்க்க வேண்டும் போல இருக்கு.. காரைக்குடிக்கு வந்தால் நாம 2 பேரும் தனியாக சந்திக்கலாம்” என்று ஆசை வார்த்தை சொல்லி கூப்பிட்டிருக்கிறார்.
சிவகங்கை பியூட்டிஷியன்
மகேஸ்வரியின் பேச்சை நம்பி, காரைக்குடிக்கு ஆசை ஆசையாக போயிருக்கிறார் வடிவேல். அவரை, அந்த பகுதியில் உள்ள ஒரு பழைய ஓட்டு வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார் மகேஸ்வரி. ஆனால், அந்த வீட்டுக்குள் நுழைந்ததுமே, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.. வீட்டிற்குள் ஏற்கனவே ஒரு கும்பல் மறைந்திருந்ததாம். வடிவேலு மீது திடீரென பாய்ந்து சரமாரியாக தாக்கியுள்ளது.
மேலும், வடிவேலுவை வலுக்கட்டாயமாக நிர்வாணப்படுத்தி, கொடூரமாக அடித்து டார்ச்சர் செய்திருக்கிறார்கள்.. பிறகு “உயிரோடு போக வேண்டுமானால் 50 லட்சம் ரூபாய் தர வேண்டும்” என்று கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர்.. இதனால் பயந்து போன வடிவேல், பணம் தருவதாக சொல்லி உள்ளார்..
வடிவேலுவுக்கு வந்த சபலம்
உடனே அந்த பணத்தை புரட்டி தருவதற்காக அந்த கும்பலை சில இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால், எங்குமே வடிவேலுவுக்கு பணம் கிடைக்கவில்லை.. இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், வேறு வழியின்றி வடிவேலை நடுரோட்டிலேயே இறக்கிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. உடம்பெல்லாம் படுகாயமடைந்த வடிவேல், அங்கிருந்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், உடனடியாக விசாரணையில் இறங்கினர். காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த தடயங்களை வைத்து குற்றவாளிகளையும் தேட துவங்கினார்கள்..
மாஸ்டர் பிளான் மகேஸ்வரி
அப்போதுதான் விசாரணையில், வடிவேலிடம் நெருக்கமாக பேசிய மகேஸ்வரி, திருச்சி காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவர் அங்கு ஒரு பியூட்டி பார்லர் நடத்தி வருவதும் தெரியவந்தது. இந்த பியூட்டிஷியன் மகேஸ்வரிதான் மோசடி சம்பவத்திற்கு மாஸ்டர் பிளானை போட்டு தந்தார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, காரைக்குடி போலீசார் மகேஸ்வரியையும், அவருக்கு கடத்தல் மற்றும் மிரட்டல் சம்பவத்தில் உடந்தையாக செயல்பட்ட திருச்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரையும் கைது செய்தனர்… அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவத்தில் தொடர்புடைய, தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்..
மகேஸ்வரியின் ஆசை வார்த்தைகளை நம்பிச் சென்ற பைனான்சியர், லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டப்பட்டு, டார்ச்சர் செய்யப்பட்ட இந்த சம்பவம் காரைக்குடி பகுதியில் பரபரப்பை தந்து வருகிறது…!!!

