`பிரதமர் மோடியின் நள்ளிரவு வீடியோ முதல் சோனம் வான்சுக் உண்ணாவிரத முடிவு வரை’ – என்ன நடந்தது? | ‘From Prime Minister Modi’s midnight video to the end of Sonam Wangchuk’s fast’ – what happened?

Spread the love

நேற்று ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் அமைதியாக நடைபெற்று வரும் வேளையில், சமூக விரோத சக்திகள் வன்முறையைத் தூண்ட முயல்வதாக வரும் செய்திகள் ஆழ்ந்த கவலையளிக்கிறது. எதிர் தரப்பு என்ன செய்தாலும் நமது பதில் அமைதியாக மட்டுமே இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி நள்ளிரவில் காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில், “வினாத்தாள் கசிவில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளை வழங்கும் வகையிலான மசோதாவை அரசு அறிமுகப்படுத்தும். வெள்ளிக்கிழமை நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும். அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் இதனை நிறைவேற்ற அரசு முயற்சிக்கும்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

வினாத்தாள் கசிவு என்பது லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மிகவும் வேதனைக்குரியது. நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டு எழுந்தவுடன் அரசு துரிதமாகச் செயல்பட்டது. குற்றவாளிகள் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் கல்வி ஆண்டு வீணாகாமல் இருப்பதை உறுதி செய்வதே எங்களது மிக முக்கியப் பொறுப்பாக இருந்தது. அனைத்து வளங்களையும் பயன்படுத்தி, 22 லட்சம் மாணவர்கள் மறுதேர்வு எழுதுவதை அரசு உறுதி செய்துள்ளது. மேலும், கல்வி அமைச்சகத்தில் பெரிய அளவிலான உயர் அதிகாரிகள் மாற்றமும் செய்யப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *