பிரதமர் மோடி அடிக்கல் நாட்டும் குஜராத் மின் உற்பத்தி நிறுவனம்: மகா.வில் வெட்டப்படும் 32,000 மரங்கள் | 32,000 trees to be felled in Maharashtra for a power plant project

Spread the love

இந்தத் திட்டத்திற்கு சுமார் 233 ஹெக்டேர் வன நிலம் மட்டுமே தேவைப்படுகிறது. இது இதே திறன் கொண்ட வழக்கமான நீர்மின் திட்டத்திற்குத் தேவைப்படும் நிலப்பரப்பை விட சுமார் 52 மடங்கு குறைவு ஆகும். மேலும், இழப்பீட்டு அடிப்படையில் காடுகளை வளர்ப்பதற்கான செயல் திட்டம் ஒன்றையும் தாங்கள் கொண்டுள்ளோம்”என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு வரும் 3ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

இத்திட்டத்திற்கு மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து சிவசேனா(உத்தவ்) சட்டமன்ற உறுப்பினர் ஆதித்ய தாக்கரே அளித்த பேட்டியில், ”பெரிய அளவிலான மரங்களை வெட்டுவதன் மூலம் மகாராஷ்டிராவை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பாலைவனமாக மாற்றுகிறார். இத்திட்டத்திற்காக 32,490 மரங்கள் வெட்டப்படும் என அரசு கூறினாலும், 4-5 லட்சம் மரங்கள்வ்ரை அகற்றப்படலாம்.

கர்ஜத் சென்று உள்ளூர் மக்களை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க இருக்கிறோம்”என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே நாளை கர்ஜத் தாலுகாவிற்கு சென்று உள்ளூர் கிராம மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேசப்போவதாக அறிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) எம்.எல்.ஏ.ரோஹித் பவார் இது குறித்து கூறுகையில்,“மரம் வெட்டுதல் ஒரு முழு சுற்றுச்சூழல் அமைப்பையும் முடிவுக்குக் கொண்டுவரும். அதன் அபாயகரமான விளைவுகளை மனிதகுலம் தாங்க வேண்டியிருக்கும்” என்று தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி வருவதற்கு முன்னதாக மரங்களை வெட்டி முடிக்கும் பணி துரிதப்படுத்தப்படுகிறதா என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கிடையே இத்திட்டத்தில் அதானி குழுமத்திற்கு பங்கு இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி இருக்கிறது.

இது குறித்து அதானி குழுமம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், ”சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்கள் தவறானவை மற்றும் புனையப்பட்டவை. அதானி குழுமத்திற்கு எந்த மின் திட்டமும் இல்லை. சம்பந்தப்பட்ட இடத்தில் முன்மொழியப்பட்ட அல்லது நடந்துகொண்டிருக்கும் பகுதி அல்லது அதன் அருகாமையில், அல்லது வீடியோக்களில் சித்தரிக்கப்பட்ட செயல்பாடுகளுடன் எந்த வகையிலும் அதானி நிறுவனத்திற்கு தொடர்பு இல்லை,” என்று தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *