அர்னாப் புயல் அப்டேட்: தமிழகத் துறைமுகங்களுக்கு எச்சரிக்கை|Cyclone Arnab Intensifies: Which Tamil Nadu Ports Are on Alert?

Spread the love

அர்னாப் புயல் குறித்து இந்திய வானிலை மையம் கொடுத்துள்ள லேட்டஸ்ட் அப்டேட்…

“மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ‘அர்னாப்’ கடும் புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ‘மிகக் கடும் புயலாக’ வலுப்பெற்றுள்ளது.

இது கோபால்பூருக்கு (ஒடிசா) தெற்கு-தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும்,

காகிநாடாவிற்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே 420 கி.மீ. தொலைவிலும், மச்சிலிப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கே 520 கி.மீ. தொலைவிலும்,

பாபட்லாவிற்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கே 590 கி.மீ. தொலைவிலும் மற்றும் ஸ்ரீ விஜய புரத்திற்கு (அந்தமான் தீவுகள்) மேற்கு-வடமேற்கே 870 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

மழை

மழை
கோப்புப்படம்

எந்தெந்த துறைமுகங்களுக்கு அலர்ட்?

இதையொட்டி, தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய மாவட்டங்களின் துறைமுகங்களுக்கும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளின் துறைமுகங்களுக்கு மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாம்பான், தூத்துக்குடி துறைமுகங்களுக்கு இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு வழங்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம், குளைச்சல் துறைமுகங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *