பிரபல மலையாள நடிகர் சலீம் குமார் நேற்றைய தினம் காலமானார். இவருக்கு வயது 56.
கடந்த சில காலமாகவே கல்லீரல் தொடர்பான நோய்க்காகச் சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று காலமானார்.
இவர் மிமிக்ரிக் கலைஞராக தனது கரியரைத் தொடங்கினார். பிரபலமான “கொச்சின் கலாபவன்’ உள்ளிட்ட குழுக்களில் மிமிக்ரி கலைஞராக இருந்தவர், 1996-ல் சினிமாவுக்குள் வந்தார்.
மலையாள சினிமாவில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட படங்களில் சலீம் குமார் நடித்திருக்கிறார். மலையாளத்தில் ‘தென்காசிப்பட்டணம்’, ‘கல்யாணராமன்’, ‘சிஐடி மூசா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து நகைச்சுவை நடிகராக மாலிவுட்டில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
இதன் பிறகு, இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், முதன்மை கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தொடங்கினார். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ‘ஆதாமின்டே மகன் அபு’ படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார்.